தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவையான ஊழியர்களை அரசு பணியாளர் தேர்வாணையம் TNPSC மூலம் அரசு தேர்வு செய்து வருகிறது. திறமையான ஊழியர்களை கண்டறிய பல்வேறு போட்டித்தேர்வுகள் மற்றும் நேர்காணல் போன்றவற்றை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகின்றது.
அரசு பணிகளின் அடிப்படையில் இந்த தேர்வுகள் குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 போன்ற தேர்வுகள் உள்ளன. கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக குரூப் 2, குரூப் 4 மற்றும் குரூப் 2A தேர்வுகள் நடைபெறாத நிலையில், 2022 ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதம் குரூப் 2 தேர்வும் மார்ச் மாதத்தில் குரூப் 4 தேர்வும் நடைபெறும் என்று அண்மையில் TNPSC தலைவரான பாலச்சந்திரன் அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் பாடத்திட்டத்துடன் முதன்மை தேர்வுகளுக்கான மாதிரி வினாத்தாளையும் ஆணையம் வெளியிட்டுள்ளது. ஆகவே விருப்பம் இருப்பவர்கள் TNPSC-யின் அதிகாரபூர்வ இணையதளமான tnpsc.gov.in மூலமாக திருத்தப்பட்ட பாடத்திட்டத்தை பார்வையிடலாம். மேலும் TNPSC குரூப் 4 பாடத்திட்டம் தொடர்பாக குழப்பம் வேண்டாம் என்றும் புதிய பாடத்திட்டம் விரைவில் வெளியிடப்படும் என்றும் தேர்வாணையம் தகவல் வெளியிட்டுள்ளது.