தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் கீழ் தமிழ்நாடு அரசுப் பணிகள் பெரும்பாலானவற்றுக்கு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. குரூப் -1, குரூப் -2, குரூப் -4 என்ற பிரிவின் கீழ் நடத்தப்படும் தேர்வுகளில் வெற்றி பெறவேண்டும் என்பது இளைஞர்களின் பெரும் கனவாக இருந்துவருகிறது. குரூப் -1 பிரிவில் தமிழக அரசின் உச்ச அதிகாரப் பணிகளான துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படும்.
குரூப் -2 பிரிவில் சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், சார் பதிவாளர், லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு உதவியாளர், புலனாய்வு பிரிவு சிறப்பு உதவியாளர், குற்றப்பிரிவு சிறப்பு உதவியாளர் ஆகிய பணிகள் இடம்பெறுகின்றன. 10 வகுப்பு தேர்ச்சியை தகுதியாகக் கொண்ட குரூப் -4 தேர்வில் வி.ஏ.ஓ உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படும். இந்த ஆண்டு குரூப் – 4 தேர்வு எப்போது நடைபெறும் அரசுப் பணியை லட்சியாகக் கொண்ட இளைஞர்கள் காத்திருந்தனர். இந்தநிலையில், குரூப் – 4 தேதி இன்று அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.