Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப்-2, 2ஏ தேர்வு முடிவுகள் எப்போது?…. வெளியான முக்கிய தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த 2-ஆண்டுகளுக்கு பின், TNPSC தேர்வுக்கான தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டு, மேலும் குறிப்பிட்டபடி குரூப்-2, 2ஏ தேர்வு குறித்த அறிவிப்பும், கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. இத்தேர்வின் மூலம் குரூப்-2 பதவியில், 116-காலிப்பணியிடங்களும் மற்றும் குரூப்-2ஏ பதவியில், 5413 காலிப்பணியிடங்களும் என மொத்தம் 5529 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இவ்வாறு அதில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வானது, கடந்த மே 21-ஆம் தேதி அறிவித்தபடி நடைபெற்றது.

இந்நிலையில் இந்த தேர்வுக்கு, தமிழகம் முழுவதும் 13-லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்தனர். மேலும் இந்த தேர்வினை 11-லட்சம் பேர் மட்டுமே  எழுதியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்தேர்வுக்கான Answer Key தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த தேர்வுக்கான முடிவுகள் எப்போது வெளியாகும் என தேர்வர்கள் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். ஏனெனில் தேர்வு முடிவுகள் வெளியான பின்,  தேர்வர்கள் குரூப்-2 தேர்வின் முதன்மை தேர்வுக்கு தயாராவது அல்லது அதன் பின்,  நடைபெற இருக்கும் குரூப்-4 தேர்வுக்கு தயாராவது என்பது குறித் முடிவு எடுக்க முடியும்.

மேலும் இது தொடர்பாக TNPSC தேர்வாணைய தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளதாவது, குரூப்-2, 2ஏ தேர்வுக்கான முடிவுகள், ஜூன் மாத இறுதியில் வெளியிட உள்ளதாக திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆண்டிற்கான, கட்ஆப் மதிப்பெண்கள் எவ்வளவு நிர்ணயிக்கப்படும் என்ற அறிவிப்புக்கு தேர்வர்கள் காத்து கொண்டிருக்கின்றனர்.

இதனை தொடர்ந்து, குரூப் -2, 2ஏ தேர்வுக்கான முதன்மை தேர்வானது, வருகிற செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு மற்றும் நேர்முகத் தேர்வு டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதங்களில் நடைபெறும். இவ்வாறு அதில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |