Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப் 2 தேர்வர்களே!…. தேர்ச்சி பெற்றால் எந்தெந்த பணிகளில் சேரலாம்?…. இதோ முழு விவரம்….!!!!

டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் மூலம் தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம், அரசு பணிகளின் அடிப்படையில் குரூப்-1, குரூப்-2, 2ஏ, குரூப்-4 உள்ளிட்ட பல்வேறு வகையான தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன்படி குரூப்-2 தேர்வின் கீழ் 5,831 காலிப்பணியிடங்கள் உள்ளதாக டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு குறித்த அறிவிப்பு இன்று (பிப்.18) வெளியாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குரூப்-2 தேர்வு எழுத தேர்வர்கள் ஏதேனும் ஒரு படிப்பை முடித்திருக்க வேண்டும். இந்த குரூப் 2 தேர்வு நகராட்சி ஆணையர், துணை வணிக வரி அதிகாரி, ஜூனியர் வேலைவாய்ப்பு அலுவலர் துணைப் பதிவாளர், Grade-II, உதவி ஆய்வாளர் உதவிப் பிரிவு அலுவலர், உதவிப் பிரிவு அலுவலர், உதவிப் பிரிவு அலுவலர் டிஎன்பிஎஸ்சி, நன்னடத்தை அதிகாரி, தொழில் கூட்டுறவு அலுவலர், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, சமூக பாதுகாப்பு உள்ளிட்ட பணியிடங்களுக்கு நடத்தப்படுகிறது. மேலும் தொழில் கூட்டுறவு அலுவலர், சிறைத்துறை, நன்னடத்தை அதிகாரி, துணை ஆய்வாளர் சர்வே இயக்குனர், பெண்கள் நல அலுவலர், தொழிலாளர் கூட்டுறவு அலுவலர், கூட்டுறவு சங்கங்களின் மூத்த ஆய்வாளர், உதவி ஜெயிலர், தொழில்துறை மேற்பார்வையாளர், தணிக்கை ஆய்வாளர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, DVAC-ல் சிறப்பு உதவியாளர் கைத்தறி ஆய்வாளர், வருவாய்த்துறையில் உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கும் இந்த குரூப்-2 தேர்வு பொருந்தும்.

இந்த பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதனை தொடர்ந்து இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர், கருவூலங்கள் மற்றும் கணக்குகள் துறையில் கணக்காளர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், தலைமைச் செயலகத்தில் உதவியாளர் பணி, நேர்முகத் எழுத்தர், பொது விநியோகத் துறை, தமிழ்நாடு மாநில திட்டக்குழு, வருவாய் நிர்வாகம், தமிழ்நாடு தலைமைச் செயலக சேவை, ஸ்டெனோ-டைப்பிஸ்ட், மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவை, வணிகம், தொழில் துறை ஆணையர், நில நிர்வாகம், நுகர்வோர் பாதுகாப்பு, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ், நில சீர்திருத்தங்கள், இளநிலை உதவியாளர், தலைமைச் செயலக துறையில் உதவியாளர் ( நிதித்துறை ), திட்டமிடல் துறை உள்ளிட்ட பதவிகளுக்கு நேர்காணல் இன்றி தேர்வு செய்யப்படுவர்.

Categories

Tech |