Categories
மாநில செய்திகள்

TNPSC- குரூப் 2 காலிப்பணியிடங்கள், பதவிகள் உள்ளிட்ட…. முக்கிய விவரங்கள் இதோ…!!!!

தமிழக அரசு பணிகளுக்கான தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தி வருகிறது. அந்த வகையில் Group 2 & 2A தேர்வின் மூலம் காலியாக உள்ள 5,831 பணியிடங்களை நிரப்பும் விதமாக நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதனால் விரைவில் தேர்வுகள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தேர்வு தேர்வு மூலம் Industrial Co-operative Officer, Probation Officer, Junior Employment Officer, Assistant Inspector of Labour, Sub Registrar, Grade-II, Assistant Section Officer, Supervisor of Industrial Co-operatives, Audit Inspector உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.

இதற்கான வயது வரம்பு 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். கல்வித் தகுதியானது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் இதில் முதல்நிலை தேர்வு , முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் பணி தேர்வு செய்யப்படும்.

இதனையடுத்து குரூப் 2A தேர்வானது முதல்நிலை தேர்வு மற்றும் முதன்மை தேர்வு மூலம் மட்டுமே தேர்வு செய்யப்படுகிறது. இந்த இரண்டு தேர்வுக்ளும் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்றின் காரணமாக நடத்தப்படவில்லை. கொரோனா குறைந்து வருவதை தொடர்ந்து TNPSC  நீண்ட நாட்களாக எதிர்பாத்திருந்த Group 2 & 2A தேர்வுக்கான முக்கிய அறிவிப்பை நேற்று  வெளியிட்டுள்ளதால் தேர்வர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Categories

Tech |