தமிழகத்தில் அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக இருக்கும் 2,207 முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப ஆசிரியர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்தது. அதன்பிறகு கடந்த செப்டம்பர் மாதத்தில் அந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது.
மேலும் தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்களும் வரவேற்கப்பட்டது. இருப்பினும் தேர்வுகள் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. மேலும் தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி காலை தேர்வு எழுத உள்ள தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு 7.30 மணிக்குள் வரவேண்டும், பிற்பகல் தேர்வு எழுத உள்ள தேர்வர்கள் 12.30 மணிக்குள் வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்வு பிப்ரவரி 12 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 20 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் உடற்கல்வி இயக்குனர் நிலை-1 மற்றும் கணினி பயிற்றுனர் நிலை 1 தேர்வுகள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகுதி தேர்வுக்காக நாமக்கல் மாவட்டத்தில் 4 தேர்வு மையங்கள், சேலம் மாவட்டத்தில் 11 கல்லூரிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 6-வது நாளான நேற்று இணையவழி மூலம் காலை கணிதம்-3, ஆங்கிலம் பாடப்பிரிவுகளுக்கு தேர்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மதியம் ஆங்கிலம்-1 பாடப்பிரிவிற்கு தேர்வு நடைபெற்றது. இதற்கிடையே தேர்வாணையம் இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பிப்ரவரி 17 ஆம் தேதி முதல் இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.