தமிழகத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து திமுக கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். இந்நிலையில் 2021-22ஆம் நிதியாண்டிற்கான முழு பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதையொட்டி இன்று காலை 10 மணிக்கு சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று முடிந்தது. தமிழகத்தின் முதல்முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது
தமிழகத்தின் நிதித்துறை அமைச்சரான பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கல் செய்து முடித்துள்ளார். இதில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. இதில் 400 கோடியில் தூய்மை பாரத இயக்கம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீர்மிகு நகரங்களின் திட்டத்திற்கு ரூபாய் 2350 கோடியும், அம்ருத் திட்டத்திற்கு ரூ. 1450 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படும். உணவு மானியத்திற்கு ரூபாய் 8437.57 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இது சென்ற ஆண்டை காட்டிலும் ரூபாய் 1937.57 கோடி அதிகம் ஆகும் என்று நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.