Categories
சினிமா தமிழ் சினிமா

கயல் ஆனந்தி நடிக்கும் ”டைட்டானிக்” திரைப்படம்…. ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு….!!!

‘டைட்டானிக்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கயல் ஆனந்தி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குனர் ஜானகிராமன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”டைட்டானிக் காதலும் கவுந்து போகும்”.

Titanic Movie Release Date Announcement | டைட்டானிக் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இந்த படத்தில் கதாநாயகனாக கலையரசன் நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் காளி வெங்கட், ஆஷ்னா சவேரி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இந்தப் படம் காதலை வைத்து ஒரு ஜாலியான படமாக உருவாகியுள்ளது.

இதையடுத்து, கடந்த ஆண்டே ரிலீசுக்கு தயாரான இந்தப் படம் சில காரணங்களால் தள்ளிப்போனது. இந்நிலையில், இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் வரும் ஜூன் 24ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |