திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு ஆந்திர மாநில சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ-வும், நடிகையுமான ரோஜா சுவாமி தரிசனம் செய்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு ஆந்திர சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ-வும் , நடிகையுமான ரோஜா தன் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். இதற்கு முன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தன் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்து முடித்துவிட்டு திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்துள்ளார்.
இவருடன் திரைப்பட இயக்குனரும், அவருடைய கணவருமான ஆர்.கே.செல்வமணி, மகன் கிருஷ்ணா கவுசிக், மகள் அஞ்சுமாலிகா மற்றும் உறவினர்கள் ஆகியோருடன் வந்து சுவாமி தரிசனம் செய்தார். இதையடுத்து தரிசனம் முடிந்த பிறகு கோவில் நிர்வாகத்தின் சார்பில் அவர்களுக்கு கோவில் பிரசாதங்கள் ,பூமாலை வழங்கப்பட்டது. அவருடன் ஆந்திர மாநில காவல்துறையினர் பாதுகாப்புக்காக உடன் வந்திருந்தனர்.