திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு 2 அடி உயரமுள்ள 50 3/4 பவுன் மதிப்பிலான தங்கம் காணிக்கையாக வழங்கப்பட்டது
ஆண்டு தோறும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சென்று ஏராளமான பக்தர்கள் முருகரை தரிசித்து வருவது வழக்கம். இந்நிலையில் சென்னை சேத்துப்பட்டு ஜி ஸ்கொயர் பில்டர்ஸ் நிறுவனம் சார்பில் சுப்ரமணிய சுவாமிக்கு 50 முக்கால் பவுன் மதிப்பிலான இரண்டடி உயரமுள்ள தங்கவேல் காணிக்கையாக செலுத்தப்பட்டது.
அப்போது ஓய்வு பெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், உதவி ஆணையர் செல்வராஜ், கோவில் இணை ஆணையர் (பொறுப்பு)கல்யாணி, தக்கார் பிரதிநிதி, தொழில்நுட்ப உதவியாளர் செல்லபாண்டியன், நெல்லை மண்டல நகை சரிபார்க்கும் அலுவலர் சங்கர், உள்துறை கண்காணிப்பாளர் மாரிமுத்து, மேலாளர் வள்ளிநாயகம் மற்றும் கோவில் பணியாளர்கள் போன்ற பலர் சுவாமிக்கு தங்கவேல் காணிக்கையாக செலுத்தும் போது உடனிருந்தனர்.