Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சாமி மட்டும் கும்பிடுங்க…பாதுகாப்பு முக்கியம்… இதை மட்டும் பண்ணிராதிங்க…!!

புத்தாண்டு நாளான இன்று திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டு தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் புனித கடலில் நீராடிவிட்டு முருகனை தரிசித்து செல்வார்கள். தமிழ் மாதம் மார்கழி முதல் நாளிலிருந்து தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பக்தர்கள் சாமியை தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதனைத் தொடர்ந்து ஆங்கிலப் புத்தாண்டான இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.

இதனையடுத்து 3:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும்,  4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் தீபாராதனையும் மற்ற கால பூஜைகளும் திருச்செந்தூரில் தொடர்ந்து நடைபெற்றது. இந்நிலையில் சாமி தரிசனத்திற்காக காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் கடற்கரைக்கு சென்று கடலில் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக கடற்கரை பகுதியில் தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கடற்கரை பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Categories

Tech |