திரிஷா ஊரடங்கு காரணமாக டிக்டாக்கில் தனது நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தி வருகிறார்
கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில் சினிமா படப்பிடிப்புகள் எதுவும் இன்றி நடிகர்-நடிகைகள் வீடுகளிலேயே இருக்கின்றனர். இந்நிலையில் நடிகை திரிஷா டிக் டாக் மூலம் ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தி வருகிறார்.
96 திரைப்படத்திற்குப் பிறகு சினிமாவில் திரிஷாவுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழி திரைப்படங்களில் பிஸியாக இருந்த நடிகை திரிஷா கொரோனா காரணமாக கேமரா முன்னாடி நிற்க முடியாமல் இருக்கும் இந்த தருணத்தை ரொம்ப மிஸ் பண்ணுவதாக இன்ஸ்டாவில் ஸ்டோரியாக போட்டிருந்தார்.
வெளியில் சென்று சூட்டிங் ஸ்பாட்டில் நடிக்க முடியாத திரிஷா டிக்டாக்கில் அக்கவுண்ட் தொடங்கி ரசிகர்களுக்காக விதவிதமான வீடியோக்களை போட்டு வைரலாகி கொண்டுள்ளார் அதோடு இன்ஸ்டாவிலும் டிக் டாக் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.