இசைக்கலைஞர் பாப் டைலன்னின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிக்க நடிகர் டிமோத்தி சாலமேட்டுடன் பேச்சு வார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
புகழ் பெற்ற இசைக்கலைஞர் பாப் டைலன்னின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இயக்கப்படும் படத்தில் நடிக்க நடிகர் டிமோத்தி சாலமேட்டுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக ஹாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இயக்குநர் ஜேம்ஸ் மேன்கோல்ட் இயக்கும் இத்திரைப்படம், பாப் டைலன் எப்படி ஒரு சாதாரண இசைக்கலைஞராக இருந்து மிகப் பெரிய நாட்டுப்புற இசைக்கலைஞனானார் என்பதை குறித்து இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்கு ‘கோயிங் எலட்ரிக்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகவுள்ளது.
இதற்கு முன்பாக மேன்கோல்ட் இயக்கிய ‘ஃபோர்ட் v ஃபெராரி’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து மேன்கோல்ட் இயக்கிய ‘லோகன்’ என்னும் சூப்பர் ஹீரோ திரைப்படம் திரைக்கதைக்காக அகாடமி விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.