Categories
சினிமா தமிழ் சினிமா

காலம் நேரம் இன்னும் வரல…. திருமணம் குறித்து பேசிய சனம் ஷெட்டி…!!!

பிக்பாஸ் பிரபலம் சனம் ஷெட்டி தனக்கு திருமணத்திற்கான காலம் நேரம் இன்னும் வரவில்லை என்று கூறியுள்ளார்.

பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் நடிகை சனம் ஷெட்டி. இதை  தொடர்ந்து சில படங்களில் நடித்து வரும் சனம் ஷெட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தள பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது ரசிகர் ஒருவர் உங்களுக்கு எப்போது திருமணம் என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த சனம் நான் ஏற்கனவே ஒருவரை காதலித்தேன். அது திருமணம் வரை சென்று கடைசியில் நின்றுவிட்டது. நாம் ஒன்று நினைத்தால் இறைவன் ஒன்று நினைக்கிறான். ஆகையால் எனது திருமணத்திற்கான காலம் நேரம் இன்னும் வரவில்லை என்று எண்ணுகிறேன் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |