செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அதிமுகவை கட்சியை பலவீனப்படுத்தினால் திமுகவிற்கு தான் லாபம். அதற்கான பணிகளில் இறங்கிவிட்டார். எல்லோருக்கும் துரோகம், துரோகத்தை தவிர வேறு ஒன்றும் தெரியாமல் சுயநலத்தோடு சுயநலத்தின் உச்சத்தில் செயல்படுகிறார். அவருக்கு ஒரு வீழ்ச்சி வந்தால், அது அம்மாவின் இயக்கத்திற்கும், தமிழ்நாட்டிற்க்கும், ஜனநாயகத்திற்கும் ஒரு நல்லதொரு முடிவாக இருக்கும்.
வாய்ப்பு கிடைக்கும் போது OPSயை சந்திப்பேன். கருணாநிதி குடும்பம் எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் ஆக்டோபஸ் மாதிரி எல்லா துறைகளிலும் சென்று அவர்கள் தங்கள் குடும்பம் தான் இருக்க வேண்டும் என்று உருவாக்க பார்ப்பார்கள். அதுதான் இப்போதும் நடக்கிறது. நிறைய தயாரிப்பாளர்கள் இவர்கள் சொல்கின்ற தேதியில் தான் வெளியிட வேண்டும், இவர்கள் சொன்னால்தான் படத்தை வெளியிட வேண்டும்.
இவர்கள் கிட்ட தான் படங்களை கொடுக்க வேண்டும் என்கின்ற ஒரு சர்வாதிகாரித்தனத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அது உண்மையாகவே ரெட் ஜெயண்ட் அரக்கனாக தான் அந்த நிர்வாகம் செயல்பட்டு இருப்பதாக எல்லாரும் சொல்கிறார்கள்,இதற்கெல்லாம் நல்ல முடிவை காலம் கொடுக்கும். பழனிச்சாமியை ஆட்சியை விட்டு இறக்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் சொல்லும்போது நான் ஆதரவு கொடுத்ததற்கு காரணம் சுயநலமும், எங்களுக்கு துரோகம் செய்துவிட்டார் என்பதை தாண்டி, அவர் கையில் ஆட்சி பொறுப்பு இருந்தால் அண்ணா திமுகவை அழித்து விடுவார் என்பதுதான்…
அதைத்தான் இன்றைக்கு செய்து கொண்டிருக்கிறார். அதனால் அண்ணா திமுகவை மீட்டெடுப்போம் என்று சொன்னேன். அது தானாகவே நடந்து விடும். அண்ணா திமுக தொண்டர்கள் அங்கு உள்ள இரட்டை இலைக்காக கட்சிக்காக இருப்பவர்கள் விழித்துக் கொள்கின்ற காலம் வந்துவிட்டது, இன்றைக்கு எடப்பாடியை தோளில் தூக்கி வைத்திருப்பவர்களே, அவரை மிதிக்கின்ற காலம் வந்துவிடும் என தெரிவித்தார்.