Categories
மாநில செய்திகள்

வாகன ஆவணங்களை புதுப்பிக்க கால அவகாசம் செப்டம்பர் வரை நீட்டிப்பு… தமிழக அரசு!

வாகன ஆவணங்களை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஓட்டுநர் உரிமம், வாகனப்பதிவு உள்ளிட்ட அனைத்து வாகன ஆவணங்களை புதுப்பிக்க செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து சில தளர்வுகளுடன் 5ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு 70 நாட்களை கடந்தும் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

இதனிடையே தனி நபர்கள் வாகனம் ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் புதுப்பிப்பது மற்றும் பொது போக்குவரத்து வாகனங்களுக்கான ஆண்டு இன்சூரன்ஸ் கட்டணத்தை கட்டுவது போன்றவற்றில் சிக்கல் ஏற்பட்டது. அனைத்து மோட்டார் வாகனம் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் வரும் ஜூன் மாதம் 30 ம் தேதி வரையில் செல்லுபடியாகும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

இது தொடர்பாக கடந்த மே 25ம் தேதி மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் அனைத்து மோட்டார் வாகன சம்பந்தப்பட்ட விவகாரங்கள் ஜூன் 30 வரையில் செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் அவை ஜூலை 31 வரையில் நீட்டிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்திருந்தது. இந்த நிலையில், ஆவணங்களை மேலும் புதுப்பிக்க கால அவகாசம் செப்டம்பர் 30ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தற்போது தமிழக அரசி அறிவித்துள்ளது.

Categories

Tech |