Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல சீரியல்களின் நேரம் மாற்றம்… நிறுத்தப்படும் ஹிட் சீரியல்… ரசிகர்கள் ஷாக்…!!!

விஜய் டிவியின் முக்கிய சீரியல்களின் நேரம் மாற்றம் செய்யபோவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சன் டிவி விஜய் டிவி ஆகிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் டிஆர்பி போட்டிகளும் இந்த தொலைக்காட்சி சீரியல்களுக்கு இடையேதான் நடந்து வருகிறது. இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல்களின் நேரங்களை மாற்றப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏனெனில், மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பிக்பாஸ் சீசன் 5 வரும் அக்டோபர் 3-ஆம் தேதியிலிருந்து தொடங்க இருக்கிறது. எனவே, 7 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் இனிமேல் 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்றும், 10 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் மௌனராகம் 2 சீரியல் இனிமேல் மாலை 7 மணிக்கும் ஒளிபரப்பு செய்யும் வகையில் மாற்றம் செய்வதாக தெரிய வந்துள்ளது.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி முடியும் வரை செந்தூரப்பூவே சீரியலை நிறுத்தி வைக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Categories

Tech |