சீனா தன்னாட்சி சுதந்திரத்தை பறிப்பதாக தகவல் எழுந்ததைத் தொடர்ந்து ஹாங்காங்கில் இருந்து டிக் டாக் செயலி நீக்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹாங்காங்கில் சீனாவின் தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து அங்கு இருக்கும் கருத்து சுதந்திரத்தை சீன அரசு பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. குறிப்பாக சீனாவுக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் யாரேனும் கருத்துத் தெரிவித்தால் அவர்களை கைது செய்யும் முயற்சியை சீனா எடுக்கத் தொடங்கியது. இதன் காரணமாக ஆங்காங்கே இருக்கும் தன்னாட்சி சுதந்திரம் பறிக்கப் படுவதாக தகவல்கள் எழுந்தது.
இதனையடுத்து டிக் டாக் செயலி ஹாங்காங் சந்தையில் இருந்து நீக்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமன்றி வாட்ஸ்அப், பேஸ்புக், கூகுள், டிவிட்டர், டெலிகிராம் உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்களும் ஹாங்காங்கில் உள்ள தங்களது செயல்பாடுகளில் மாற்றம் கொண்டுவர இருப்பதாக அறிவித்துள்ளன. இதற்கு முன்னதாக இந்தியாவில் நாட்டின் பாதுகாப்பு கருதி டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.