தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 600 உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சரமாரியாக உயர்ந்து கொண்டு செல்வது மக்களுக்கு அச்சம் எழுந்துள்ளது. இந்தநிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் தமிழகத்தில் இன்று 600 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எணிக்கை 6,000யை தாண்டியுள்ளது. மொத்த பாதிப்பாக 6,009ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 52 ஆய்வகங்கள் உள்ளன. இன்று 3 இறப்பு ஏற்பட்டதால் பலியானோர் எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது. மகராஷ்டிராவை விட தமிழகத்தில் தான் அதிக சோதனை செய்யப்பட்டுள்ளது. 405 ஆண்கள் , 195 பெண்கள் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.