சிரித்தபடி வீடியோ பதிவு செய்துவிட்டு டிக் டோக்கில் பிரபலமான பெண் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
டெல்லியை சேர்ந்த ஷியா கக்கர் என்ற இளம்பெண் டிக் டோக் செயலியில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பாலோவர்ஸுடன் மிகவும் பிரபலமானவராக இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவரது வீட்டில் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு மேற்கொண்ட விசாரணையில் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்பது தெரியவந்துள்ளது. அவர் தற்கொலை செய்வதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு சிரித்தபடி காணொளி ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் ஷியாக்கு ஏராளமான மிரட்டல்கள் வந்த வண்ணம் இருந்தது என தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என தெரிவித்ததோடு ஷியாவின் மேனேஜரிடம் விசாரித்த போது அவர் உயிர் இழந்த நாள் தான் அவருடன் பேசியதாகவும் வேலை விஷயத்தில் நன்றாகவே இருந்ததாகவும் தனிப்பட்ட பிரச்சினையினால் இந்த முடிவை எடுத்து இருக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.