Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“புலியை சுட்டு கொல்லுங்க” தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. கோவையில் பரபரப்பு…!!

புலி தாக்கியதால் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தேவர் சோலை பகுதியில் சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் எஸ்டேட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சந்திரன் எஸ்டேட் நிர்வாகத்திற்கு சொந்தமான கால்நடைகளை மேய்த்து கொண்டிருந்த போது புதர் மறைவில் பதுங்கியிருந்த புலி சந்திரனின் பின் தலையில் அடித்து பலமாக தாக்கியுள்ளது. அந்த சமயம் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வனத்துறையினர் சந்திரனின் அலறல் சத்தம் கேட்டு வாகனத்தை நிறுத்தி உள்ளனர்.

மேலும் அங்கு புலி பதுங்கி இருக்கலாம் என்ற பயத்தில் வனத்துறையினரும், தோட்ட தொழிலாளர்களும் சத்தம் போட்டவாறு விரைந்து சென்று ரத்த வெள்ளத்தில் கிடந்த சந்திரனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே சந்திரன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனைத்தொடர்ந்து புலியை சுட்டுக் கொல்ல வேண்டும், சந்திரனின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் தேவர்சோலை பேரூராட்சி அலுவலகம் முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது புலியை சுட்டுக் கொல்லும் வரை போராட்டம் தொடர்ந்து நடத்தப்படும் என பொதுமக்கள் தெரிவித்ததால் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் புலியினை பிடிப்பதற்காக வனத்துறையினர் 2 இடங்களில் குண்டு வைத்தும், கண்காணிப்பு கேமரா பொருத்தியும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |