தமிழகத்தில் உள்ள தியேட்டர் உரிமையாளர்கள் சார்பில் பன்னீர்செல்வம் முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு கோரிக்கை கடிதம் எழுதி அனுப்பியுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் உள்ள மல்டிபிளக்ஸ், மால் மற்றும் தனி தியேட்டர்களுக்கு ஒரே அளவிலான மின்சார கட்டணம், சம்பளம் என அனைத்துமே ஒரே வகையில் இருப்பதால், அனைத்து தியேட்டர்களுக்கும் ஒரே மாதிரியான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். அதன் பிறகு பராமரிப்பு கட்டணத்தையும் உயர்த்தி வழங்குவதோடு, ஏசி தியேட்டர்களில் வசூலிக்கப்படும் ரூ. 4 கட்டணத்தை, ரூ. 10 ஆகவும், சாதாரண தியேட்டர்களில் வசூலிக்கப்படும் ரூ. 2 கட்டணத்தை ரூ. 5 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும்.
அதன் பிறகு பொது தியேட்டர்களை சிறு தியேட்டர்களாக மாற்ற பொதுப்பணி துறையில் விண்ணப்பித்தால் போதுமானது என்ற முறையை கொண்டு வருவதோடு, வருடத்துக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படும் சி சான்றிதழை 3 வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பித்துக் கொள்ளும் வசதியையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பினாலும் அனுமதி வழங்குவதற்கு முன்பாகவே தியேட்டர்களில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தற்போது கூறப்படுகிறது.
அதாவது மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் அதிகபட்சமாக வசூலிக்கப்படும் 160 கட்டணமானது தற்போது 190 ரூபாயாகவும், சிங்கிள் ஸ்க்ரீன் தியேட்டர்களில் 130 ரூபாய் கட்டணமானது 60 ரூபாய் உயர்த்தப்பட்டு 190 ரூபாய் ஆகவும் வசூலிக்கப்படுகிறது. மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் திரையிட அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திறிந்த நிலையில் அக்டோபர் 21 முதல் 27-ம் தேதி வரை சிறப்பு காட்சிகளை வெளியிடுவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.