இன்று நடைபெற்ற இபிஎல் கால்பந்து தொடரில் பர்ன்லி எஃப்சி அணி -லிவர்பூல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இன்று லீக் போட்டி நடைபெற்றது. அதில் லிவர்பூல் அணி – பர்ன்லி எஃப்சி அணியை எதிர்கொண்டது. பரபரப்புடன் தொடங்கிய போட்டியில் இரு அணி ஆட்ட காரர்களும் தங்களது கோல்களை அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
வலிமையான டிஃபன்ஸ் ஆட்டத்தால் கோல் அடிக்க முயற்சி தவிர்க்கப்பட்டது. முதல் பாதி ஆட்டம் முடிவில் இரு அணிகளும் எந்த கோல்களையும் அடிக்காமல் சமநிலையில் இருந்தது. அதன்பிறகு நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் ஆட்டக்காரர்கள் கோலடிக்கும் முயற்சியில் ஆர்வத்துடன் விளையாடினர்.
ஆனால் அதுவும் தோல்வியடைந்தது. அதன்பிறகு ஆட்டத்தின் 83 ஆவது நிமிடத்தில் பர்ன்லி எஃப்சி அணிக்கு அதிர்ஷ்டவசமாக பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்திய அஷ்லே பார்ன்ஸ் கோல் அடித்து கலக்கினார். இதனால் ஆட்டத்தின் முடிவில் பர்ன்லி எஃப்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் அணியை வீழ்த்தி அதிர்ஷ்டவசமாக வெற்றி பெற்றது.