சுவிட்சர்லாந்தில் திபெத்திய மாணவர்கள் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் திபெத்திய மாணவர்கள் சிலர் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அலுவலகம் முன்பு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது சீனாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்ய வேண்டும் என்று மாணவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பியுள்ளனர். மேலும் சீன அரசு சிறுபான்மையின மக்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்களை மேற்கொண்டு வருகிறது.
எனவே இந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியை உலக நாடுகள் புறக்கணிக்க வேண்டும் என்று கூறி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து அங்கிருந்த பாதுகாவலர்கள் அந்த திபெத்திய மாணவர்களை குண்டுகட்டாக தூக்கி வெளியேறியுள்ளனர்.