Categories
உலக செய்திகள்

பற்றி எரிந்த நெருப்பு…. அணைக்க போராடிய தீயணைப்பு வீரர்கள்…. 8 பேர் பலியாகிய சோகம்….!!

17 மாகாணங்களில் பற்றி எரிந்த காட்டுத்தீயை தீயணைப்பு வீரரர்கள் போராடி கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

துருக்கி நாட்டை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 7 நாட்களாக காட்டுத்தீயானது எரிந்து வருகிறது. இதனால் மிலாஸ், அடானா,ஆஸ்மானியா,மெர்சின் போன்ற பகுதிகள் உட்பட 17  மாகாணங்களில் காட்டுத்தீ பரவியுள்ளது. மேலும் இந்த காட்டுத்தீயினால் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 800 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த காட்டுத்தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த தீ விபத்தினால் அப்பகுதியில் உள்ள மக்கள் வேறு இடங்களுக்கு பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டனர். இந்த காட்டுத்தீயினால் சுமார் 95000 ஏக்கர் நிலப்பரப்பும் எரிந்து நாசமாகி உள்ளது. இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |