உங்களுடைய வீட்டில் துர்சக்திகள் நடமாட்டம் இருக்கிறதா என்பதை எளிமையான முறையில் நீங்களே அறிந்து கொள்வது எப்படி என்பதை பற்றி பார்க்கலாம்.
இந்த இடத்தில் நடமாட்டம் என்பது நான் எதைச் சொல்கிறேன் என்றால் கெட்ட சக்தி, காத்து கருப்பு, பில்லி சூனியம், ஏவல் இந்த மாதிரியான தீய சக்திகள் உங்களுடைய வீட்டில் இருக்கிறது என்று நீங்களா நினைத்தால், சின்ன ஒரு விஷயத்தை செஞ்சு பார்த்து அது உங்களுக்கு எப்படி வருதுன்னு பார்த்துட்டு உங்களுடைய வீட்டில் துர்சக்தி நடமாட்டம் இருப்பதை உறுதி செய்து கொள்ளலாம் .
எலுமிச்சை பழங்கள் தேவை 21,11,41 இந்த மாதிரியான எண்ணிக்கையில் எலுமிச்சை பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த எலுமிச்சை பழத்தை மாலையாக கோர்த்து கொள்ளுங்கள். மாலையாக கோர்த்து கொண்டு வெள்ளிக்கிழமை அன்று அருகில் இருக்கக்கூடிய துர்க்காதேவிக்கு அந்த எலுமிச்சம் பழம் மாலை அணிவியுங்கள். இப்படி எலுமிச்சம்பழ மாலை அணிவித்த பிறகு துர்காதேவியை நல்ல மனதார வணங்கி கொள்ளுங்கள்.
இப்படி வணங்கிய பின்பு நீங்கள் சாத்திய மாலையிலிருந்து ஒரே ஒரு எலுமிச்சை பழத்தை மட்டுமே நீங்கள் வீட்டுக்கு எடுத்து கொண்டு வர மாதிரி இருக்க வேண்டும். அல்லது நீங்கள் எலுமிச்சைபழ மாலை போட்ட பின்னாடி ஒரே ஒரு எலுமிச்சை பழத்தை தனியா எடுத்துட்டு போயிடு அது அம்பாளுடைய பாதத்தில் வைத்துக் கொண்டு நீங்கள் கும்பிட்டுக் கொண்டு அதிலிருந்து ஒரு பழத்தை மட்டும் எடுத்து கொண்டு வீட்டுக்கு செல்லுங்கள்.
இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை செய்யுங்கள். இவ்வாறு எடுத்துவந்த பழத்தைஉங்களுடைய வீட்டில் ஏதேனும் ஒரு மூலையில் வைத்து விடுங்கள் யாருக்கும் தெரியாதபடி. இப்படி வைத்த எலுமிச்சம் பழத்தை நீங்கள் ஏழு நாட்கள் எதுவுமே செய்ய கூடாது. அது பக்கம் கூட போகக் கூடாது. ஏழுநாட்கள் கழித்த பின்பு நீங்கள் வைத்த எலுமிச்சம் பழத்தை எடுத்து பாருங்கள். அது நன்றாக காய்ந்து போய் சொறசொறன்னு இருந்தால் உங்களுடைய வீட்டில் எந்த துர்சக்தி நடமாட்டமும் இல்லை.
உங்களுடைய வீட்டில் நல்ல சக்தி தான் இருக்கும். நீங்கள் எதைப் பற்றியும் பயம் தேவை இல்லை. ஆனால் அதற்கு மாறாக எலுமிச்சை-பழம் அழுகிப் போய் இருந்தால் அல்லது கெட்டுப் போயிருந்தால் உங்களுடைய வீட்டில் துர்சக்தியின் நடமாட்டம் நிலவுகிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு நீங்கள் செய்து பார்த்து உங்கள் வீட்டில் கேட்ட சக்திகள் இருக்கா இல்லையா என்பதை நீங்கள் எளிமையான முறையில் அறிந்து கொள்ளலாம்.
அதற்குரிய மந்திரப் பிரயோகம், ஹோமங்கள், பூஜைகள் இவை எல்லாம் செய்து அந்த சக்தியை நீங்கள் வெளியேற்றிவிடலாம்.