Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் இவ்வளவு கூட்டமா… அடித்து பிடித்து வாங்கிய வியாபாரிகள்… போலீஸ் சூப்பிரண்டின் எச்சரிக்கை…!!

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் முழு ஊரடங்கையொட்டி மீன் வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் ஒரே நேரத்தில் குவிந்தனர். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் விசைப் படகுகளையும், கட்டுமரங்களையும், வள்ளங்களும் தங்கு தளமாக கொண்டு  மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு என்பதால் நேற்று அனைத்து கடைகளையும் திறப்பதற்கு அரசு அனுமதி வழங்கியது. இதனால் குளச்சல் மீன் சந்தையில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதனால் வள்ளம் கட்டுமரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால், விசைப்படகுகளில் பிடித்து வரப்பட்ட மீன்களை ஏலகூட்டத்தில் விற்பனை செய்துள்ளனர். இதனை வியாபாரிகள் அடித்து பிடித்து ஏலம் எடுத்தனர். அதன்பின் மீன்களை வாங்கிச் செல்வதற்காக குளச்சல் மீன்சந்தையில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியுள்ளது.

இதனையடுத்து அந்த பகுதியில் உதவி போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ் சாஸ்திரி தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது போலீஸ் சூப்பிரண்டு மீன்பிடி துறைமுகத்தில் கூட்டமாக நின்ற பொதுமக்களை ஒழுங்குபடுத்தியுள்ளார். அதன்பின் அவர் பொதுமக்களிடம் சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறும், முகக்கவசம் அணியும்மாறும் வலியுறுத்தினார். மேலும் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உதவி போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ் சாஸ்திரி எச்சரித்துள்ளார்.

Categories

Tech |