Categories
உலக செய்திகள்

வணிக வளாகத்திற்குள் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு… குற்றவாளியை மடக்கி பிடித்த போலீஸ்… வெளியான முக்கிய தகவல்…!!

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் குறித்து விசரணையில் சில விஷயங்கள் தெரியவந்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை அமெரிக்காவில் உள்ள வணிக வளாகத்திற்குள் இளைஞர் ஒருவர் திடீரென நுழைந்து கண்ணில் காண்பவர்களை எல்லாம் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த கொடூர தாக்குதலில் பலர்  ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்து விழுந்தனர். இது தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞரை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த இளைஞர் எரிக்டேலி என்ற காவல் துறையை சுட்டுக் கொன்றான். இருப்பினும் காவல்துறையினர் அந்த இளைஞரின் காலில்  சுட்டு மடக்கிப் பிடித்தனர். திடீரென்று நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதலில்  10 பேர்  உயிரிழந்துள்ளனர், மேலும் படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவரது பெயர் அல் இஷா என்பதும் இந்த சம்பவத்திற்கு பின்னணியில் எந்த நோக்கமும் இல்லை என்று தெரியவந்துள்ளது. இந்நிலையில் துப்பாக்கிசூடு  நடத்திய இளைஞரின் மீது காவல்துறையினர் 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Categories

Tech |