மர்மநபர் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் 2 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு ஜெர்மனியிலிருக்கும் Espelkamp என்னும் பகுதியில் திடீரென்று மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் புகுந்துள்ளார். இதனையடுத்து துப்பாக்கியுடன் புகுந்த அந்த மர்மநபர் அதே பகுதியிலிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளார். மேலும் அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகே இருந்த தெருவிலும் அந்த மர்ம நபர் துப்பாக்கியைக் கொண்டு சுட்டுள்ளார்.
இவ்வாறு அந்த மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள். அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.