Categories
உலக செய்திகள்

நாங்களும் காப்பாத்துவோம்ல…. செல்போனில் பட்ட குண்டு…. பிரபல நாட்டில் ருசிகர சம்பவம்….!!

பிரேசிலில் கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிசூட்டில் இருந்து உரிமையாளரை காப்பாற்றிய செல்போனின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. 

பிரேசிலில் பெட்ரோலினா  நகரில் நடந்த கொள்ளையின் போது, திருடன் ஒருவன் பெட்ரோ என்பவரை சுட்டுவிட்டு தப்பி ஓடினான். அப்பொழுது பெட்ரோ தனது பாக்கெட்டில் வைத்திருந்த 5 வருட  பழமையான மோட்டரோலா G5 செல்போன் அவர் மீது பாய்ந்த தோட்டாவை தடுத்து நிறுத்தியது.

இதனையடுத்து இடுப்பில் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெட்ரோ சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் டிஸ்ப்பிளே சேதமடைந்த செல்போனின் புகைப்படத்தை காயமடைந்தவர் வெளியிட்டார். இதில் செல்போனின் கவரில் உள்ள ஹல்க் படம் புல்லட்டை தடுத்ததாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |