Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருக்கும் போது… பூ வியாபாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

பூ வியாபாரியின் வீட்டில் பணம் மற்றும் தங்க நகைகளை மர்ம நபர் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோபால் செட்டி பகுதியில் பூ வியாபாரியான வெயிலுமுத்து என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பேச்சியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சுதர்சன் என்ற மகன்  இருக்கின்றார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் செந்தில்வேலன் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் வெயிலு முத்துவின் மகன் மற்றும் மருமகள் வீட்டின் மேல் மாடியிலும், அவரின் மனைவி மற்றும் பேரக்குழந்தை ஆகியோர் கீழ் அறையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது வீட்டுக்குள் திடீரென புகுந்த மர்ம நபர் ஒருவர் உறங்கிக்கொண்டிருந்த பேச்சியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகைகளை சத்தமில்லாமல் கழற்றிகொண்டிருந்தார். இதனை அறிந்த பேச்சியம்மாள் திடீரென கண்விழித்து அலறி சத்தம் போட்டுள்ளார். அந்த அலறல் சத்தத்தைக் கேட்டு கணவர் மற்றும் மகன் ஆகியோர் எழுந்து செல்வதற்குள் அந்த மர்மநபர் பேச்சியம்மாளின் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகைகளை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதனையடுத்து வெயிலுமுத்து உடனடியாக அறையின் உள்ளே சென்று பார்த்தபோது பேரன் கழுத்திலிருந்த தங்க நகை மற்றும் பீரோவில் வைத்திருந்த ரூபாய் 2 லட்சம் பணத்தையும் மர்ம நபர் திருடிச் சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதுகுறித்து வெயிலுமுத்து உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். அந்த தகவலின் படி காவல்துறையினர் மற்றும் தடவியல் நிபுணர்கள் இணைந்த சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டில் பதிவான மர்ம நபரின் கைரேகைகளை சேகரித்துள்ளனர். அப்போது வெயிலுமுத்து காவல்துறையினரிடம் தனது மனைவி மற்றும் பேரன் அணிந்திருந்த 15 சவரன் தங்க நகைகள் மற்றும் பீரோவில் வைத்திருந்த ரூபாய் 2 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றதை தெரிவித்துள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வீடு புகுந்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |