தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.
வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ” தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு அரியலூர், கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பாலக்காற்றுடன் மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என அறிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியாசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்ஸியஸை ஒட்டியும் பதிவாகும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.