Categories
உலக செய்திகள்

இது என்ன கொடுமை…? திடீரென்று பாய்ந்த மின்னல்…. மேல் பகுதி முழுவதும் தீக்கிரையான சம்பவம்….!!

ரஷ்யாவில் திடீரென்று மின்னல் தாக்கியதால் அடுக்குமாடி கட்டிடத்தின் மேல் தளம் முழுவதும் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவிலிருக்கும் chelyabinsk என்னும் பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தின் மீது திடீரென்று மின்னல் தாக்கியுள்ளது. இதனால் கட்டிடத்திலுள்ள மேல் தளம் முழுவதும் தீப்பற்றி எரிந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள்.

அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்கள். இதையடுத்து திடீரென்று ஏற்பட்ட இந்த விபத்தில் எவருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் கூறியுள்ளார்கள்.

Categories

Tech |