நடிகை பிரியா பவானி சங்கர் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
சின்னத்திரை சீரியலில் நடிகையாக அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் பிரியா பவானி சங்கர். இதையடுத்து இவர் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் ,ஜோடி நம்பர் 1 உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். இதன்பின் இவர் தமிழ் சினிமாவில் ‘மேயாத மான்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார் . இதைத் தொடர்ந்து மாபியா, கடைக்குட்டிசிங்கம், மான்ஸ்டர் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார்.
தற்போது இவர் ருத்ரன் ,பத்து தல உள்பட ஏராளமான திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் நடிகை பிரியா பவானி சங்கர் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் துளி கூட மேக்கப் போடாமல் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது . அதில் அவருடன் சீரியல் நடிகை சரண்யாவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.