Categories
சினிமா தமிழ் சினிமா

‘திரௌபதி’ இயக்குனர் பூஜையுடன் தொடங்கிய ‘ருத்ரதாண்டவம்’… எகிறும் எதிர்பார்ப்பு…!!!

‘திரௌபதி’ பட இயக்குனர் மோகன் ஜி அடுத்ததாக  ‘ருத்ர தாண்டவம்’ படத்தின் படப்பிடிப்பை பூஜையுடன் தொடங்கியுள்ளார் .

தமிழ் திரையுலகில் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘திரௌபதி’ . நடிகர் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்திருந்த இந்த படம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தது . இருப்பினும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வசூலை வாரிக்  குவித்தது . இதையடுத்து இயக்குனர் மோகன் ஜி இயக்கும் படம் ‘ருத்ர தாண்டவம்’. இந்த படத்திலும் திரௌபதி பட நடிகர் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடிக்கிறார் .

ருத்ர தாண்டவம் படக்குழு

இந்த படத்தில் சின்னத்திரை நடிகையும், குக் வித் கோமாளி பிரபலமுமான தர்ஷா குப்தா கதாநாயகியாக அறிமுகமாகிறார். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை நேற்று பூஜையுடன் படக்குழுவினர் தொடங்கியுள்ளனர் . இந்த படத்தில் நடிகர் ரிச்சர்ட் ரிஷி போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் . இயக்குனர் மோகன் ஜி யின் ‘திரௌபதி’ படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பால் ‘ருத்ர தாண்டவம்’ படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Categories

Tech |