Categories
தேசிய செய்திகள்

ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்ட இளம்பெண்… விசாரணையில் வெளியான திடுக்கிடும் உண்மை..!!

டிசம்பர் 22ஆம் தேதி மும்பை வாசி பகுதியில் 24 வயது உடைய ஒரு பெண்ணை ரயிலில் பலாத்காரம் செய்து தூக்கி வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மூத்த அதிகாரி விஷ்ணு இதுகுறித்து கூறுகையில்: “செவ்வாய்க்கிழமை காலை வாசி பாலம் அருகே ஒரு பெண்ணின் சடலம் கிடந்ததாக வாசி ஸ்டேஷன் மேலாளருக்கு தகவல் வந்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உடலை கைப்பற்றி அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் வீட்டு வேலை செய்து வந்த அந்தப் பெண் உடல்ரீதியாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது.

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இன்னும் அந்த பெண்ணிற்கு சுயநினைவு வராத காரணத்தினால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குற்றவாளி மற்றும் பெண்ணின் விவரங்களை அறிய சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Categories

Tech |