Categories
தேசிய செய்திகள்

யமுனை ஆற்றில் வீசி எறியப்பட்ட பச்சிளம் குழந்தை… காரணம் என்ன தெரியுமா..? அதிரவைத்த சம்பவம்…!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் பிறந்த குழந்தை திருநங்கை என்பதால் அதை ஆற்றில் வீசி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள யமுனா நதியில் குழந்தை ஒன்று மிதப்பதாக அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த குழந்தையை பத்திரமாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் குழந்தையின் உடல் நலம் குறித்து மருத்துவமனையின் டாக்டர் கூறும்போது 3 கிலோ 300 கிராம் அளவுள்ள குழந்தை திருநங்கை என்றும், அது நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இதுகுறித்து காவல்துறை நடத்திய விசாரணையில் குழந்தை திருநங்கை என்ற காரணத்தினால் குழந்தையின் பெற்றோர்கள் ஆற்றில் வீசி இருப்பார்கள் என்று தெரியவந்துள்ளது. ஆற்றில் வீசி சென்ற நபர்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Categories

Tech |