லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த மூன்று பேரை காவல்துறை கைது செய்ததோடு, அவர்களிடமிருந்த லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் என்ற பகுதியில் அப்பகுதி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசாருக்கு சிலர் லாட்டரி சீட்டுகளை பொது இடத்தில் வைத்து விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. இந்நிலையில் வேலூரை சேர்ந்த சுந்தரம் என்பவர் அண்ணா சிலை அருகிலும், வெண்மணி என்ற கிராமத்தில் வசிக்கும் ஆறுமுகம் என்பவர் போளூர் பஸ் நிலையம் அருகிலும்,
வடுகசாத்து என்ற கிராமத்தில் வசித்து வந்த ஆனந்தன் என்பவர் தேசியமயமாக்கப்பட்ட வங்கி அருகிலும் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்ததை போலீசார் கண்டனர். இதனையடுத்து அவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அவர்களிடமிருந்து 200க்கும் மேற்பட்ட லாட்டரி சீட்டுகளையும், ரூபாய் 16,500 பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.