Categories
உலக செய்திகள்

நீடிக்கும் ரஷ்யப்போர்…. கார்கீவ் நகரில் இன்று தாக்குதல்… சிறுவன் உட்பட மூவர் பலி…!!!

உக்ரைன் நாட்டின் கார்கீவ் நகரத்தில் ரஷ்ய படையினர் இன்று தாக்குதல் நடத்தியதில் மூவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொள்ளும் போர் தற்போது வரை நீடிக்கிறது. ரஷ்யப்படையினர் உக்ரைன் நாட்டில் உள்ள பல அடுக்குமாடி குடியிருப்புகள், அலுவலகங்களை நோக்கி தாக்குதல் நடத்தி ஆயிரக்கணக்கில் மக்களை கொன்று குவித்து வருகிறார்கள். இந்நிலையில் இன்று ரஷ்ய படையினர் சால்டிவ்ஸ்கி மாவட்டத்தில் தாக்குதல் மேற்கொண்டனர்.

இதில் 13  வயதுடைய சிறுவன் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 72 வயதுடைய ஒரு மூதாட்டிக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மக்கள் பாதுகாப்பான இடங்களில் வசிக்குமாறும், சாலை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |