Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“கடன் தொல்லை” தாய், தந்தையுடன்…. மகனும் விஷம் அருந்தி தற்கொலை….. தென்காசியில் சோகம்….!!

தென்காசியில் கடன்  தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த  மூவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   

தென்காசி மாவட்டம் கடையம் பகுதியை அடுத்த கீழ ஆம்பூர் ரோஸ் கார்டன் பகுதியில் வசித்து வந்தவர் சந்தானம். இவர் மிட்டாய் கடை ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். இவரது மனைவி லட்சுமி. இவர் அப்பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஸ்ரீதர் என்ற மகனும் ஜோதி என்ற மகளும் உள்ளனர்.

ஸ்ரீதர் தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி வர,  ஜோதி கல்லூரியில் படித்து வருகிறார். இதற்கு முன் மாரியம்மன் கோவில் அருகே வாடகை வீட்டில் வசித்து வந்த சந்தானம் ரோஸ் கார்டன் பகுயில் புதியதாக வீடு கட்டி தனது குடும்பத்தினருடன் குடியேறினார். சந்தானத்திற்கு அதிக கடன் தொல்லை இருப்பதாக கூறப்பட்ட நிலையில்,

கடந்த 15ம் தேதி கடன் கொடுத்த சில நபர்கள் அவரது வீட்டிற்கே சென்று தங்கள் கடனை திருப்பித் தருமாறு தகராறில் ஈடுபட்டு உள்ளனர். இதில் மனமுடைந்த சந்தானம் லட்சுமி மற்றும் அவரது மகன் ஸ்ரீதர் ஆகியோர் விஷம் அருந்தி தற்கொலை செய்து செய்து கொண்டனர்.

இதையடுத்து அவரது மகள் ஜோதி மயங்கி நிலையில்  மூவரும் கிடப்பதைக் கண்டு அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைக்க மூவரையும் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தாய் தந்தை மகன் மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். பின் இச்சம்பவம் குறித்து கடையம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட வழக்கு பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |