Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் துப்பாக்கிசூடு சம்பவத்தால் கண்காணிப்பு தீவிரம்..!!

காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து பாதுகாப்பு படையினரால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் இந்திய ராணுவப்படையினருக்கும் இடையே அடிக்கடி துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க போலீசாரும், பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அவந்திபோரா அடுத்த டிரால் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவி வருவதை தடுப்பதற்கு போலீசார் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தினர். நீண்ட நேரம் நடைபெற்ற இந்த சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் தீவிர  கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |