Categories
தேசிய செய்திகள்

போலீஸ் ஸ்டேஷனுக்குள் சரக்கு அடிக்கும் காவலர்கள்… வைரலாகும் வீடியோ..!!

இந்துபூர் நகர போலீஸ் ஸ்டேஷனுக்குள் மதுகுடித்த  3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். 

ஆந்திர பிரதேச மாநிலத்தில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள், மணல் மற்றும் போதைப் பொருள்கள் கடத்தப்படுவதைத் தடுக்க அம்மாநில அரசு போதைப் பொருள் கடத்தல் தடுப்பு சிறப்புப் பிரிவை அமைத்தது. அதன் அடிப்படையில், எல்லைப் பகுதிகளில் சட்டத்திற்கு விரோதமாக விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து வருகிறது. அவ்வாறு பறிமுதல் செய்யப்படும் மது பாட்டில்கள் அனைத்துமே போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வரப்பட்டு ஒரு தனி அறைகளில் வைக்கப்படுவது வழக்கம்.

இந்தநிலையில், அம்மாநிலத்தின் அனந்தபுரம் மாவட்டம், இந்துபூர் போலீஸ் ஸ்டேஷனில் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை பிரித்து 2 தலைமை காவலர் மற்றும் ஒரு காவலர் என 3 பேர் மது குடிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்தசம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், 3 காவலர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து இந்துபூர் வட்டக் காவல் ஆய்வாளர் மன்சூரிதின் கூறியதாவது, ”3 காவலர்களும் மது குடித்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், சம்பவம் நடந்த தேதி குறித்து இன்னும் விசாரணை நடத்தப்படவில்லை. மது குடித்த திருமலேஷ், கோபால் மற்றும் நூர் அகமத் ஆகிய 3 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்தசம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு அறிக்கை வெளியிடப்படும்” எனத் தெரிவித்தார்.

Categories

Tech |