பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்து அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டியவர் கைது
சாத்தான்குளம் அருகே கட்டாரிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தங்கச்செல்வி. இவர் கடந்த 20ம் தேதி வீட்டில் தனிமையில் இருந்த சமயம் அதே ஊரை சேர்ந்த கூலித்தொழிலாளி முருகன் என்பவர் எதிர்பாராத நேரம் வீட்டிற்குள் நுழைந்து தங்கச்செல்வியிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். இதனால் அச்சமடைந்த தமிழ்ச்செல்வி சத்தம் போட்டு உள்ளார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக வந்து முருகனை விரட்டி உள்ளனர். இதனால் கோபம் கொண்ட முருகன் தங்கச்செல்வியை கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். இச்சம்பவம் குறித்து தங்கச்செல்வி புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் முருகனை கைது செய்தனர்.