Categories
இந்திய சினிமா சினிமா

தமிழக மக்கள் ஆதரவு அளிக்கிறார்கள்… நடிகைக்கு வந்த கொலை மிரட்டல்…!!

தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக நடிகை ஒருவர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

நடிகை ஸ்ரீ ரெட்டி நேற்று சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து புகார் ஒன்றை அளித்துள்ளார். புகார் அளித்த பிறகு நிருபர்களிடம் கூறியதாவது ”

தற்போது இரண்டு படங்களில் நடித்து வரும் எனக்கு தமிழக மக்கள் மிகுந்த ஆதரவு தெரிவிக்கின்றனர். ஆனால் யூ டியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் என்னை பற்றி மிகவும் தவறான தகவல்களை தெலுங்கு துணை நடிகரும் 50 வயது மதிக்கத்தக்க டான்ஸ் மாஸ்டரும் பரப்பி வருகிறார்கள். நான் எப்படி வீடு வாங்கினேன்? எனக்கு எத்தனை ஆண் நண்பர்கள்? என அவர்கள் அவதூறாக பதிவிட்டுள்ளனர்.

இது எனது தனிப்பட்ட விஷயம். அதுமட்டுமின்றி என்னை பெட்ரோல் ஊத்தி எரித்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாகவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளேன். நிச்சயம் உரிய விசாரணை மூலம் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்பிக்கை அதிகம் உள்ளது. இது தொடர்பான ஆதாரங்களையும் அவர்களிடம் சமர்ப்பித்துள்ளேன்” இவ்வாறு அவர் கூறினார்

Categories

Tech |