Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடந்த நகை பறிப்பு சம்பவம்…. முற்றுப்புள்ளி வைத்த காவல்துறை….!!

சென்னை பூந்தமல்லி எடுத்த மாங்காட்டில் தனியாக வீட்டில் உள்ள பெண்களை குறிவைத்து தகவல் கேட்பது போல அருகில் சென்று கத்தியை காட்டி மிரட்டி நகைகளை பறிப்பு மர்ம கும்பல் தொடர் கைவரிசையை காட்டி வந்த கும்பலுக்கு முற்றுப்புள்ளி வைத்த காவல் துறை

சென்னை பூந்தமல்லி அடுத்த மாங்காட்டில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் முகவரி கேட்பது போல் நடித்து பெண்களை மிரட்டி அவர்களை அணிந்திருக்கும் நகைகளை கொள்ளை அடிக்கும் சம்பவம் அதிக அளவில் நடைபெற்று வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த வகையில் நேற்று முன்தினம் மாங்காடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புகுந்த 2 கொள்ளையர்கள் அந்த வீட்டில் இருந்த பெண்ணிடம் முகவரி கேட்பது போல் நடித்து, திடீரென்று வீட்டின் உள்ளே புகுந்து அந்த பெண் அணிந்திருந்த 7 சவரன் நகைகள் தரும்படி மிரட்டியதில், பயந்துபோன அந்த இளம்பெண் வீட்டில் யாரும் இல்லாததால் செய்வதறியாது களவாணிகள் கேட்ட நகைகளை கட்டிக் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து அந்த பெண் சார்பாக மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் இது குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளின் உதவியுடன் குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான புகைப்படங்கள் அனைத்தும் காவல் நிலையத்திற்கும் பகிரப்பட்டது அப்போது வாகன சோதனையின்போது திருவள்ளூர் மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த கார்மேக மற்றும் சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த தினேஷ் ஆகிய 2 பேரை காவல்துறையினர் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறி வைத்து அவர்களது கணவரின் உறவினர் போல வீட்டிற்குள் சென்று அவர்களை மிரட்டி அவர்கள் அணிந்திருக்கும் நகைகளை பறித்து செல்வோம் என கொள்ளையர்கள் ஒப்புக்கொண்டதாக காவலர்கள் தெரிவித்தனர். கொள்ளையர்கள் தாங்கள் கொள்ளையடித்த நகைகளை அடமானம் வைத்து அந்தப் பணத்தில் அதிக அளவில் கஞ்சா வாங்கி விட்டதாகவும்  போலீசாரிடம் சிக்காமல் இருக்க வண்டலூர் வெளிவட்ட சாலை ஓரத்திலேயே தங்கி இருந்ததாகவும் தெரிவித்தனர், கொள்ளையர்களிடமிருந்து 3 இருசக்கர வாகனங்கள், 4 சவரன் தங்க நகை ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இவர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |