Categories
மாநில செய்திகள்

“டெட் தேர்வு”… வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வா…? செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு…!!

டெட் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு 7 ஆண்டு முடிந்து விட்டால் மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மூன்றாம் கட்ட ஊரடங்கு நிறைவடைந்து இன்று முதல் நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கில் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. அந்தவகையில் முக்கிய பங்காக பொதுப்பக்குவரத்து, வழிபாட்டுத்தலங்கள், நூலகங்கள் போன்றவற்றிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில் ஒரு முக்கிய அறிவிப்பை தெரிவித்துள்ளார்.

அதாவது, ஊரடங்கு தளர்வைத் தொடர்ந்து சென்னை கோட்டூர்புரத்தில்  அண்ணாநூற்றாண்டு நூலகம் திறக்கப்பட்டது அப்பொழுது அங்குள்ள நூலகங்களை ஆய்வு செய்தவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் 160 நாட்களுக்குப் பிறகு 3785 நூலகங்கள் திறக்கப்பட்டு நாடெங்கும் செயல்பட்டு வருவதாகவும், புதிய கல்வி கொள்கை தொடர்பான குழு அமைப்பது பற்றி முதலமைச்சர் அறிவிப்பார் எனவும், பள்ளிகள் திறப்பு என்பது இப்பொழுது  யோசித்து பார்க்கக்கூடிய நிலை இல்லை என்றும் அவர் கூறினார். மேலும் தமிழகத்தில் ஏற்கனவே டெட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று 7ஆண்டு முடித்தவர்கள் மறுபடியும் தேர்வு எழுத வேண்டும் என்றும் அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

Categories

Tech |