Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கோவில்பட்டியில் பரிதாபம்…. லாரியில் மோதிய லோடு ஆட்டோ…. இருவர் உயிரிழப்பு….!!

லாரி மீது லோடு ஆட்டோ மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி அருகிலுள்ள மேலத்திடியூர் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் கோயம்புத்தூரில் லேத் பட்டறை நடத்தி வருகிறார். பொங்கல் பண்டிகைக்காக தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் லோடு ஆட்டோவில் சொந்த ஊருக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தார். ஆட்டோவை அவருடைய உறவினரான பாஸ்கர் ஓட்டி வந்தார். விபத்தன்று காலையில், கோவில்பட்டி அருகே இடைசெவல் விளக்கு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அந்த சாலை ஓரம் நின்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக லோடு ஆட்டோ மோதியது.

இந்த விபத்தில் பாஸ்கருடைய மனைவி சுமத்ரா, கோபாலகிருஷ்ணன் மகள் யாஷிகா ஆகிய 2 பேரும் பரிதாபமாக பலியாகினர். மேலும் கோபாலகிருஷ்ணன், அவருடைய மனைவி விஜயா, மகன் பிரனேஷ், பாஸ்கர், அவருடைய மகன் ராஜ்குமார் ஆகிய 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களுக்கு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இச்சம்பவம் குறித்து நாலாண்டின்புத்தூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகிறார்கள்.

Categories

Tech |