தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 361 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் சென்னையில் தான் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்தது. இதையடுத்து தமிழக அரசு எடுத்த தளர்வில்லாத பொதுமுடக்கம் மற்றும் பல்வேறு கட்ட முயற்சியின் காரணமாக பாதிப்பு கடந்த சில வாரங்களாகவே குறைந்து காணப்படுகிறது.
சென்னையில் பாதிப்பு குறைந்து வந்தாலும் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுரை, திருவண்ணாமலை, வேலூர், தூத்துக்குடி உள்ளிட்ட பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 361 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,004ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.