Categories
தேசிய செய்திகள்

தொங்கு பாலம் விபத்து….. அரசிடம் சான்றிதழ் பெறவில்லையா?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

கடந்த 19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் குஜராத் மாநிலம் மோர்வின் நகரில் உள்ள மச்சு நதி மீது 230 மீட்டர் நீள தொங்கு பலம் அமைக்கப்பட்டது. பொதுமக்கள் சுற்றுலா வரும் முக்கிய இடமாக இந்த பாலம் திகழ்கிறது. கடந்த ஆறு மாதங்களாக அந்த பாலத்தில் தனியார் நிறுவனம் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு வந்தது. இதனை முன்னிட்டு மூடப்பட்டிருந்த அந்தப் பாலம் பூனரமைப்பு பணிகள் முடிந்து ஐந்து நாட்களுக்கு முன்பு குஜராத்தி புத்தாண்டு அன்று மீண்டும் திறக்கப்பட்டது. அந்தப் பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டம் அலைமோதியது. தீபாவளி பண்டிகை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகமானோர் பாலத்துக்கு வந்திருந்தனர். அப்போது பொதுமக்களின் எடையை தாங்க முடியாமல் அந்த பாலம் மாலை 6.30 மணிக்கு அறுந்து விபத்து ஏற்பட்டது. பாலத்தில் இருந்தவர்கள் நதியில் விழுந்தனர்.

இந்த விபத்து குறித்து அறிந்த தேசிய பேரிடர் மீட்பு பணியினர், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் நதியில் மூழ்கியவர்களில் 177 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், இறந்தவர்கள் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது. 60 பேர் இன்னும் காணவில்லை. பாலத்தில் தொங்கிக் கொண்டிருந்த 5-10 பேர் மீட்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முப்படைகள், தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து மீட்புபணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் மோர்பியில் தொங்கு பாலம் புனரமைப்பு பணிகள் முடிந்தவுடன் மீண்டும் திறப்பதற்கான அரசிடம் அனுமதியும், பாலத்தின் உறுதி தன்மைக்கான சான்றிதழும் பெறவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |