வீட்டு வைத்தியம் மூலம் தொண்டை கரகரப்பு, ஜலதோஷம் என அனைத்திற்கும் எளிதில் தீர்வு காணலாம்.
தொண்டை கரகரப்பு, வரட்டு இருமல், தொண்டையில் கிருமி தொற்று இருந்து மூச்சுவிடவே ரொம்ப கஷ்டப் படுகிறார்கள் அப்படி என்றால் இந்த ஒரு வீட்டு வைத்தியத்தை அந்த ஆரம்ப முறையிலேயே எடுத்துக்கொண்டீர்கள் என்றால் கண்டிப்பாக உங்கள் தொண்டையில் இருக்கக்கூடிய அந்த கிருமித் தொற்று அனைத்தும் முழுமையாக நீங்கி விடும்.
இது வீட்டில் நார்மலா இருக்க கூடிய பொருட்களை வைத்து செய்யலாம். இது எந்த ஒரு அலர்ஜியை ஏற்படுத்தாது, மேலும் கிருமித்தொற்று என்பது இருக்கவே இருக்காது.
முதலில் ஒரு கிளாஸ், மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், 3 அளவு கல் உப்பு எடுத்து கொள்ளுங்கள். மஞ்சள்தூள் நம் எல்லோருக்குமே தெரிந்த ஒரு கிருமிநாசினி. நம் உடலில் எந்த நோய் தொற்று இருந்தாலும் அதை நீக்கக் கூடிய தன்மை இந்த மஞ்சளுக்கு அதிகமாகவே இருக்கிறது. கூடவே இஞ்சி எடுத்துக்கொள்ளுங்கள்.
சின்ன துண்டு இஞ்சியை நன்றாக நச்சு இஞ்சி சாறு எடுத்துக் கொள்ளுங்கள். அயோடின் கலந்த உப்பு யூஸ் பண்ணாதீங்க, கல்லுப்பு இருந்தாலே போதும், அதை இதோடு சேர்த்து கொள்ளுங்கள். இம்மூன்றையும் ஒன்றாக சேர்த்து, இதோடு நன்றாக கொதிக்க வைத்த தண்ணீர் எடுத்து இந்த டம்ளரில் ஊற்றிக் கொள்ளுங்கள்.
இத கொஞ்சம் கொஞ்சமா குடித்து வந்தால், தொண்டையில் இருக்கக்கூடிய கிருமித் தொற்று முழுமையாக அழிக்கப்பட்டு விடும். நமக்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது. இதில் இருக்கக்கூடிய எல்லா சத்துக்களும் நம் உடலில் இருக்கக்கூடிய அனைத்து நச்சுக்களையும் கிருமிகளையும் அழிக்கக்கூடியது.
குழந்தைகளாக இருந்தாலும் இதில் கால் கிளாஸ் அளவு கொடுக்கலாம். எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது. குழந்தைகளுக்கும் இந்த கிருமி தொற்றில் இருந்து நல்ல ஒரு முழுமையான தீர்வு கிடைக்கும். அதே மாதிரி வரட்டு இருமலால் ரொம்ப அவதிப்படுபவர்களும் இந்த ஒரு வீட்டு வைத்தியத்தை எடுத்துக் கொள்ளலாம்